27 முறையும் ஆமாம்…உக்ரைன், மால்டோவாவிற்கு வாழ்த்து சொன்ன ஜெர்மன் ஜனாதிபதி



ஐரோப்பிய யூனியனின் வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு ஜெர்மன் ஜனாதிபதி (chancellor) ஓலாஃப் ஸ்கோல்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைனின் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக் குழுவின் கூட்டத்தில் உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளின் வேட்பாளர் விண்ணப்பங்களுக்கு சில விதிமுறைகளுடன் ஆதரவு அளிப்பதாக ஐரோப்பிய ஆணைக் குழு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளுக்கான வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 529 உறுப்பினர்கள் ஆதரவும் 45 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்து இருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் அந்தஸ்தை உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய இருநாடுகளும் பெற்றுள்ளன.

இதனை வரவேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, 27 நாடுகளுடனான உறவில் இது தனித்துவமான மற்றும் வரலாற்று நிகழ்வு, அத்துடன் உக்ரைனின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய இருநாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள வேட்பாளர் அந்தஸ்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜெர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz ) 27 ஐரோப்பிய நாடுகளையும் குறிக்கும் விதமாக 27 முறையும் ஆமாம் என்ற கருத்தை தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் களமிறங்கும் ரோபோ நாய்கள்: ரஷ்ய போரில் அமெரிக்கா செய்துள்ள மிகப் பெரிய உதவி!

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய உறுப்பினர்களாக இணைய விருக்கும் இரண்டு புதிய வேட்பாளர்களை ஐரோப்பிய யூனியன் வரவேற்கிறது, ஐரோப்பிய குடும்பத்தில் இதற்கான நல்ல ஒத்துழைப்பும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.