அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் 19 குழந்தைகள் சுட்டுக் கொலை செய்தது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் பைடன் கையெழுத்திட்டப்பிறகு சட்டமாக அமலுக்கு வரும்.