வேற லெவலில் இந்தியன் ரயில்வே… உலக வங்கி $245 மில்லியன் கடன் வழங்க ஒப்புதல்!

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்காக உலக வங்கி 245 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே துறையில் உள்ள சரக்கு போக்குவரத்து மற்றும் சேமிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ரயில்வே துறையை மேலும் நவீனபடுத்துவதற்காகவும் உலக வங்கி இந்த கடனை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சரக்கு போக்குவரத்தில் ரயில்வே துறை மிகப்பெரிய அளவில் மேம்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாவ்.. தங்கம் இவ்வளவு குறைந்திருக்கா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்..!

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

உலக வங்கியின் நிதியுதவியால் ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்தை நவீனப்படுத்தப்பட்ட பின்னர் தனியார் முதலீடுகள் ரயில்வே துறையில் குவிய வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு ரயில்கள்

சரக்கு ரயில்கள்

இந்தியாவில் தற்போது 71 சதவீதம் சரக்குகள் சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரயில்வே துறையில் உள்ள சரக்கு போக்குவரத்து நவீனமாக்கினால் ரயில்வே மூலம் செல்லும் சரக்குகளின் அளவு அதிகரிக்கும்.

காற்று மாசுபாடு
 

காற்று மாசுபாடு

கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து தனது பங்கை இழந்து கொண்டே வரும் நிலையில் சாலை போக்குவரத்தில் தான் அதிகமாக சரக்கு போக்குவரத்து நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக காற்று மாசுபாடு, சாலை விபத்துக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதால் மீண்டும் ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து துறையை விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

உலக வங்கி

உலக வங்கி

இதனையடுத்தே ரயில்வே சரக்கு போக்குவரத்தை நவீனமாக்க உலக வங்கியை ரயில்வே துறை நாடியது. இந்நிலையில் தற்போது ரயில்வே துறைக்கு உலக வங்கி 245 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே துறை கார்பனை வெளியேற்றாத ஜீரோ நிலையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 7.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை மற்றும் பிற வாயுக்களை வெளியேற்றி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில் வரும் 2030ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த பிரச்சனையே இருக்காது என்று கூறப்படுகிறது.

நெரிசல் குறையும்

நெரிசல் குறையும்

இதுகுறித்து உலக வங்கியின் இந்தியாவின் செயல்பாட்டு மேலாளர் மற்றும் செயல் இயக்குனரான ஹிடேகி மோரி அவர்கள் கூறியபோடு, ரயில்களில் இருந்து கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைக்கும் அதே வேளையில், புதிய திட்டம் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான ரயில் பயணிகளுக்கு நன்மை பயக்கும் என்றும், ஏனெனில் ரயில் பாதைகள் பிரத்யேக வழித்தடங்களுக்கு சரக்குகளை நகர்த்துவதன் மூலம் நெரிசலைக் குறைக்கின்றன’ என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

World Bank approves $245 million loan to modernise India’s railway

World Bank approves $245 million loan to modernise India’s railway | வேற லெவலில் இந்தியன் ரயில்வே… உலக வங்கி $245 மில்லியன் கடன் வழங்க ஒப்புதல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.