துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து, சக அணி வீரரின் பேட்டில் பட்டு கேட்ச் ஆன சுவாரசிய நிகழ்வு, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நடந்தது.
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்கள் எடுத்தது.
டேரில் மிட்செல் 78 ஓட்டங்களுடனும், டாம் ப்ளெண்டல் 45 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
நேற்றை இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் நிக்கோல்ஸ் ஆட்டமிழந்த விதம் வித்தியாசமாக இருந்தது.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வீசிய பந்து நிக்கோல்ஸ் அடித்தபோது, எதிர்முனையில் இருந்த சக அணி வீரர் மிட்செலை நோக்கி சென்றது.
உடனே அவர் தனது பேட்டை விலக்க முயற்சித்த நிலையில், பந்து பேட்டில் பட்டு பக்கவாட்டில் நின்றிருந்த இங்கிலாந்து வீரர் லீசிடம் கேட்சாக சென்றது.
சில நொடிகளில் பந்துவீச்சாளர் ஜேக் லீச்சே என்ன ஆயிற்று என்று குழம்பி நின்றார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவே மிகுந்த ஏமாற்றத்துடன் நிக்கோல்ஸ் வெளியேறினார். அவர் 99 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
What on earth!? 😅🙈
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/yb41LrnDr9
— England Cricket (@englandcricket) June 23, 2022