TNEA News: எஞ்ஜினீயரிங் அட்மிஷன் மாணவர்கள் விரும்பும் ‘Tier 2’ கல்லூரிகள் இவை!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் குறித்து தேடும் மாணவரா நீங்கள். அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

நாம் இதற்கு முந்தைய செய்தியில் அண்ணா பல்கலைக்கழத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘Tier 1’ பொறியியல் கல்லூரிகளை பார்த்தோம்.

இப்போது ‘Tier 2’ கல்லூரிகள் குறித்து பார்க்கலாம்!

‘Tier 2’ என்பது பிளாட்டினம் மற்றும் சில்வர் என இரண்டு பிரிவுகளாக உள்ளது. பிளாட்டினம் பிரிவில், 2வது சுற்று முடிவில் 75 சதவீதம் மற்றும் அதுக்கும் மேலான இடங்கள் நிரம்பியிருக்க வேண்டும். 178க்கும் மேல் அவரேஜ் கட் ஆஃப் இருக்க வேண்டும். அதுவே சில்வர் பிரிவில், 2வது சுற்று முடிவில் 60 சதவீத இடங்கள் நிரம்பியிருக்க வேண்டும், 175க்கு மேல் அவரேஜ் கட் ஆஃப் வேண்டும்.

‘Tier 2’ கல்லூரிகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்!

‘Tier 2’ கல்லூரிகள்- பிளாட்டினம் பிரிவு (TNEA CODE)

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோவை- 2718

அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு- 2709

அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி-4974

ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி, திருவள்ளூர் -1112

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, சென்னை – 1419

ராஜலெக்ஷ்மி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் – 1432

ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை- 2739

பன்னாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு – 1304

ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை- 1304

லொயோலா ஐகேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி – 1450

அரசு பொறியல் கல்லூரி, கிருஷ்ணகிரி – 2603

செண்டிரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல் இன்ஜினிரியங் அண்ட் டெக்னாலஜி (CIPET), சென்னை – 1321

TIER 2- சில்வர் பிரிவு கல்லூரிகள்

ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி, சென்னை- 1324

ஆர்.எம்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருவள்ளூர்- 1128

மெப்கோ ஸ்க்லெங் பொறியியல் கல்லூரி, விருதுநகர் – 4960

கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு – 2711

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை – 2719

அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி – 3465

இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி, சேலம் – 2343

வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை- 5986

சென்ட் ஜோசப்  பொறியியல் கல்லூரி, ஓஎம்ஆர் ரோடு, சென்னை- 1387

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி, கோவை – 2722

சவீதா பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்-  1216

பனிமலர் பொறியியல் கல்லூரி, பூந்தமல்லி, சென்னை – 1210

இதில், கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் சேர, நிறைய மாணவர்கள் முன்னூரிமை கொடுக்கின்றனர். அதற்கு காரணம் இங்கு படித்த பழைய மாணவர்கள் கல்லூரி குறித்து, சிறந்த விஷயங்களை கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கோவை பகுதிகளில் உள்ள பிரொடக்ட் பேஸ்ட் கம்பெனிகளின், வேலை வாய்ப்புகளை குறி வைத்து, அங்கு பணியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த கல்லூரியில் அதிகமாக உள்ளது.  குறிப்பாக கோடிங்-கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் உள்ள பெரிய கல்லூரிகள் கூட, இந்த கல்லூரிக்கு வந்து, அங்குள்ள செண்டர் ஆஃப் எக்ஸ்லென்சை பார்த்து, தங்களின் கல்லூரிகளில் அமல்படுத்துகின்றனர். கல்லூரியும் மிகவும் ரிச் லுக்கில் இருக்கும். இதனால் இந்த கல்லூரியில் சேர, அதிகளவு மாணவர்கள் போட்டி போடுகின்றனர்.

TNEA 2022: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; A-Z தகவல்கள்

இதில் கோவை பகுதி பொறுத்தவரைக்கும் பிளாட்டினம் பிரிவில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, ஈஸ்வர் கல்லூரி, பன்னாரி அம்மன் கல்லூரி என மூன்று கல்லூரிகள் உள்ளன. அதுவே சில்வர் பிரிவில், கொங்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரிகள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.

சென்னை பகுதியில், பிளாட்டினம் பிரிவில் ஆர்.எம்.டி. ஸ்ரீ சாய்ராம் கல்லூரிகள், ராஜலெக்ஷ்மி தொழில்நுட்ப கல்லூரி, ஈஸ்வரி, லொயோலா ஐகேம், சிப்பெட் ஆகிய கல்லூரிகள் உள்ளன.

சில்வர் பிரிவில், ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி, ஆர்.எம்.கே. , சென்ட் ஜோசஃப், சவீதா, பனிமலர் பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இதுதவிர பல்வேறு அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.

எந்த கல்லூரிக்கு சென்றாலும் பிளேஸ்மெண்ட் என்பது மிகமிக முக்கியம். சமீபமாக தொடங்கப்பட்ட கல்லூரியாகவே இருந்தாலும், முன்னணி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணம் பிளேஸ்மெண்ட்ஸ் தான்.

முக்கியமாக, பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரையில், ஒருமுறை கல்லூரிக்கு நேரில் சென்று பார்த்து, பிளேஸ்மேண்ட் உள்ளிட்ட விஷயங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு எங்கு சேருவது என்பது குறித்து முடிவெடுக்கவும் என்று கல்வி ஆலோசகர் அஸ்வின்’ தனது ’Career Guidance ASHWIN’ யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோவில் கூறினார்.

அந்த வீடியோ இங்கே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.