கனேடிய குடியுரிமை பெறும் முயற்சியில் இருந்த இளம்பெண்ணை சீரழித்த இலங்கையர்: தீர்ப்பு திகதி வெளியிடப்பட்டது



இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர தன் உறவினரான இளம்பெண் ஒருவருக்கு உதவிய இலங்கையர் ஒருவரே, வேலையே பயிரை மேய்ந்த கதையாக, அந்த பெண்ணை பலமுறை சீரழித்த வழக்கில், செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Kamloopsஇல் வாழும் Nihal Maligaspe (71) என்னும் இலங்கையர், தன் உறவினரான Dinushini Maligaspe என்ற இளம்பெண் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர உதவியுள்ளார்.

Nihalஉடைய குடும்பத்துடன் தங்கியிருந்து குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் Dinushini ஈடுபட்டிருக்கும்போது, பல முறை அவரிடம் அத்துமீறியுள்ளார் Nihal.

தற்போது 40 வயதாகும் Dinushini, தான் Nihal குடும்பத்துடன் தங்கியிருக்கும்போது, அவர் தன்னை பலமுறை பாலியல் ரீதியில் தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவித்த நீதிபதி, Nihal தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதுடன், பிரிட்டிஷ் கொலம்பியாவைவிட்டு அவர் வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.