வீல் சேரில் அமர்ந்து ஹோம் டெலிவரி.. நம்பிக்கை தளராத டெலிவரி மேன்..!

இன்றைய காலகட்டத்தில் உணவு, நீர், உடை என்ற அடிப்படை தேவைகளோடு இணையத்தினையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு இன்றைய இளைஞர்கள் இணையத்திற்கும் அடிமை எனலாம்.

காலையில் எழுந்ததுமே ஸ்மார்ட்போனை பார்ப்பவர்களே இங்கு அதிகம். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பரவியுள்ள இணைய பயன்பாடானது அதிகரித்துள்ளது.

709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..!

அதுமட்டும் அல்ல அனைத்து அத்தியாவசிய தேவையில் இருந்தும், நமக்கு தேவையான உணவு வரையில் ஆன்லைனிலேயே கிடைக்கிறது. இப்படி மக்களை சோம்பேறிகளாக்க எண்ணற்ற வசதிகள் இருந்தாலும், மறுபுறம் இதுவே பல ஆயிரம் ஊழியர்களுக்கு வாழ்வழிக்கும் ஆதராமாகவும் உள்ளது.

உணவு டெலிவரியா?

உணவு டெலிவரியா?

இப்படி பல ஆயிரம் பேருக்கு வாழ்வளித்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். ஆன்லைன் ஆப் மூலமாக உணவு டெலிவரி சேவை செய்து வரும் ஸ்விக்கி, சோமேட்டோ பற்றி அறியாதவர்கள் இருப்பது மிக கடினம். குறிப்பாக நகரப்பகுதிகளில் இன்றும் பல குடும்பங்களுக்கு உணவளிப்பதே ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் தான்.

நினைத்த நேரத்தில் பிடித்த உணவு

நினைத்த நேரத்தில் பிடித்த உணவு

நினைத்த நேரத்தில், நினைத்த உணவை, பிடித்தமான உணவகத்தில் இருந்து வாங்கி உண்பது கடினம். அண்ணா சாலையில் இருந்து கொண்டே தாம்பரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சென்று சாப்பிட முடியுமா? ஆனால் ஸ்விக்கி மூலம் இது சாத்தியமே.

வலி மிகுந்த பின்னணி
 

வலி மிகுந்த பின்னணி

இப்படி நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ள இந்த இணைய சேவையின் பின்னணியில் என்ன இருக்கிறது. வலி மிகுந்த நபர்களின் நம்பிக்கை, கனவு என எதனையும் யோசித்திருப்போமா? என்றால் இல்லை. இப்படி பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு சம்பவம் தான் சென்னை சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி மேனின் கதை.

நம்பிக்கை தளராத கணேஷ்

நம்பிக்கை தளராத கணேஷ்

சாதரணமாக ஒரு காலி சிறிய காயம் ஏற்பட்டாலே ஐயோ அம்மா என கதறும் நாம், சில நாட்களுக்கு அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு தூங்குவோம். ஆனால் எத்தகைய துயரங்கள் வந்தாலும் அதனை நான் எதிர்கொள்வேன். என்ன பிரச்சனை வந்தாலும் அதனை சமாளிப்பேன் என்ற நம்பிக்கையுடன் பணிபுரியும் உணவு டெலிவரி ஊழியர் தான் சென்னையை சேர்ந்த கணேஷ் முருகன்.

ஏன் என்ன காரணம்?

ஏன் என்ன காரணம்?

37 வயதான கணேஷ் முருகன் வீல் சேரில் அமர்ந்து கொண்டே உணவு டெலிவரியினை செய்து வருகின்றார். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரின் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் எழுந்து நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. எனினும் அதற்கும் கலங்காமல் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் தனது வேலையை தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஐபிஎஸ் அதிகாரியான டிபன்ஷூ கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sucess story! Meet India’s first wheelchair food Delivery man

Ganesh Murugan, 37, food delivery employee, is in a wheelchair delivering food. This shows his self-confidence.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.