சென்னை: ஓ.பி.எஸ். மீது தண்ணீர் பாட்டில் வீசியதை எடப்பாடி பழனிசாமி கண்டித்தாரா? என்று ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மீது பாட்டில் வீசினார்கள், தரக்குறைவாக பேசினார்கள். ஒற்றைத் தலைமை என ஏற்கனவே சொல்லித் தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர் என சாடினார்.