நிதி அயோக்-ன் புதிய சிஇஓ பரமேஸ்வரன்.. யார் இவர் தெரியுமா..?!

இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், நிர்வாகம் எனப் பல பிரிவில் முக்கியமான முடிவுகளையும் ஆய்வுகளையும் செய்யும் ஒன்றிய அரிசின் திங்க் டேங்க் அமைப்பான நிதி ஆயோக்-ன் புதிய சிஇஓ பெயரை வெளியிட்டுள்ளது.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், ஆறு ஆண்டுக் காலம் இந்த அமைப்பின் தலைவராக இருந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இப்பதவியில் இருந்து வெளியேற உள்ளார்.

இந்த முக்கியமான அமைப்பின் உயர் பதவியில் அடுத்தது யார் என்ற கேள்வி இருந்த நிலையில் ஒன்றிய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

நிதி ஆயோக்

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், வெளியேற உள்ள நிலையில் அவருக்குப் பதிலாகக் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும், அரசின் ஸ்வச் பாரத் இயக்கத்தின் பின்னால் இருந்து இயக்கும் முக்கிய அதிகாரியுமான பரமேஸ்வரன் நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார் எனப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) அறிவித்துள்ளது.

பரமேஸ்வரன்

பரமேஸ்வரன்

பரமேஸ்வரன் நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆரம்பப் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கும். இவருடைய பணியைப் பொறுத்துப் பணி காலம் நீட்டிக்கப்படும். இதே பாணியில் தான் அமிதாப் காந்த் பணிக்காலமும் நீட்டிக்கப்பட்டது.

அமிதாப் காந்த் ஜூன் 2021
 

அமிதாப் காந்த் ஜூன் 2021

அமிதாப் காந்த்-ன் நிதி அயோக் சிஇஓ பதவிக்காலம் ஜூன் 2021 இல் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது, இதன் மூலம் ஜூன் 2022 இறுதியில் இவருடைய பணி முடிகிறது. 1980 பேட்ச் கேரளா கேடரின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, அமிதாப் காந்த் 2016 முதல் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.

நிதி அயோக் ஆதிக்கம்

நிதி அயோக் ஆதிக்கம்

அமிதாப் காந்த் தனது பதவி காலத்தில்,ஒன்றிய அரசுக்கும், பிரதமர் ஆலோசனைக்கும் முக்கிய ஆலோசகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவருடைய தலைமையில் நிதி அயோக் தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான கொள்கை விஷயங்களில் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு உதவியது.

யார் இந்தப் பரமேஸ்வரன்..?

யார் இந்தப் பரமேஸ்வரன்..?

அமிதாப் காந்த் பதிலாக நியமிக்கப்படும் பரமேஸ்வரன், 17 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 2009 இல் இந்திய நிர்வாகப் பணியிலிருந்து (IAS) ராஜினாமா செய்தார். அதன் பின்னர் 2016 இல் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் (D0DWS) செயலாளராக மீண்டும் பணியில் சேர்ந்தார்.

ஸ்வச் பாரத் அபியான் திட்டம்

ஸ்வச் பாரத் அபியான் திட்டம்

இந்தியாவில் கிராமப்புறங்களில் 90 மில்லியனுக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலம் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கான பிரச்சாரத் திட்டமான ஸ்வச் பாரத் அபியான் திட்டம் இவரது தலைமையில் தான் நடந்தது.

உலக் வங்கி

உலக் வங்கி

ஜூலை 2020-ல் DoDWS துறையின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார், பின்னர் அமெரிக்காவில் உலக வங்கியில் பணியாற்றினார்.

ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை

63 வயதாகும் பரமேஸ்வரன் ஏப்ரல் 1998 முதல் பிப்ரவரி 2006 வரை ஐக்கிய நாடுகள் சபையில் மூத்த கிராமப்புற நீர் துப்புரவு நிபுணராகப் பணியாற்றியுள்ளார். பரமேஸ்வரன் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி அரசின் கல்வித் துறையில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Parameswaran Iyer will be new Niti Aayog CEO as Amitabh Kant leaves by june 30

Parameswaran Iyer will be new Niti Aayog CEO as Amitabh Kant leaves by june 30 நிதி அயோக்-ன் புதிய சிஇஓ பரமேஸ்வரன்.. யார் இவர் தெரியுமா..?!

Story first published: Friday, June 24, 2022, 18:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.