மணிமேகலைக்கு கிடைத்த அடுத்த வெற்றி
தொகுப்பாளினியான மணிமேகலை தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பலரும் மணிமேகலை – ஹூசைன் தம்பதியினர் பற்றி நெகடிவாக பேசி வந்தனர். ஆனால், மணிமேகலையும் ஹூசைனும் தங்களது கடின உழைப்பினால் வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர். பைக், கார் என படிப்படியாக வளர்ச்சிக் கண்ட இந்த ஜோடி சில நாட்களுக்கு முன் 2 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தனர். தற்போது அந்த நிலத்தில் சொந்தமாக வீடுகட்ட திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்படியாக அந்த நிலத்தில் போர் வெல் போட்டு தண்ணீர் எடுக்கும் வீடியோவை பகிர்ந்து பாஸிட்டிவாக கேப்ஷன் கொடுத்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் உட்பட பலரும் மணிமேகலை – ஹூசைனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.