BSNL Plan Offers: பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் டாக்டைம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு, நிறுவனம் முழு மதிப்பை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த சலுகை ஒரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Meta Pay Facebook: பேஸ்புக் பே இல்ல… இனி மெட்டா பே; எதுவானாலும் சமூகம் பெரிய இடம்!
அதாவது, ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை, BSNL பயனர்கள் ரூ.110 திட்டத்தை டாக்டைம் ரீசார்ஜ் செய்தால், அவர்கள் ரூ.110 முழு மதிப்பும் கணக்கில் கிடைக்கும்.
Telecom: மாதத்திற்கு வெறும் 19 ரூபாய் போதும்… BSNL சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்!
சலுகைகளை அள்ளிவீசும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் ஜூன் 11 முதல் ஜூன் 12 வரையிலும், ஜூன் 18 முதல் ஜூன் 19 வரையிலும் இதே சலுகையை அறிமுகப்படுத்தியது. பயனர்கள் இந்த திட்டத்திலிருந்து இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். இது பயனர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
Jio Recharge: ரூ.200க்கும் குறைவான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்!
இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் வசிக்கும் பயனர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். பயனர்கள் BSNL இன் நீண்ட கால திட்ட வவுச்சரை எடுத்து மேலே குறிப்பிட்டுள்ள டாக்டைம் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யலாம்.
பயனர்கள் மட்டுமே இதன் மூலம் பயனடைவார்கள்
அந்த வகையில், செயலில் உள்ள சேவை மற்றும் குரல் அழைப்பை இயக்குவதன் மூலம் அவர்கள் பிஎஸ்என்எல் சிம்மை தொடர்ந்து பயன்படுத்த முடியும். BSNL பல திட்ட வவுச்சர்களை வழங்குகிறது.
Vivo Y21 Offer: ரூ.2,600க்கு விவோ போன்; எப்படி வாங்குவது என்று பாருங்கள்!
இதன் இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் அவற்றைக் குறித்து அறிந்து கொள்ளலாம். BSNL இன் Selfcare மொபைல் செயலி உங்களுக்கான அனைத்து தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது.
Nothing Phone (1): நத்திங் போன் 1 ஆர்டர் பண்ணலாமா? Pre-order லிங் உங்களுக்காக!
பிஎஸ்என்எல் உங்களுக்கு பல தரப்பட்ட சேவைகளை பிற நிறுவனங்களுடன் விலை மலிவாக வழங்குகிறது. ஆனால், சில சேவை குறைபாடுகள் காரணமாக மட்டுமே பயனர்கள் பிஎஸ்என்எல்-ஐ இரண்டாம் தாரமாக வைத்துள்ளனர் என்பது வேதனைக்குரியது.