வாழைப் பழத்தில் எத்திலின் ரசாயண கலவை தெளிக்கப்படுவதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரிடம் சவால் விட்ட வியாபாரியின் வீடியோ வெளியாகி உள்ளது.
புதுச்சேரி பாரதியார் வீதியில் உள்ள வாழைத்தார் மண்டியின் முன்பு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களின் மீது இளம் வியாபாரி ஒருவர் வீதியில் வைத்தே பகிரங்கமாக எத்திலீன் ரசாயன கலவையை தெளித்துக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், தம்பி வேகமாக பழத்தை பழுக்க வைக்க இந்த ரசாயனத்தை வாழைத்தார் மீது தெளிக்கிறியே, சின்ன பசங்க எல்லாம் சாப்பிடர வாழைப்பழத்தை ஏன்ம்மா நஞ்சாக்குற என்று கேட்க எத்தனையோ பேர் வந்தாங்க , இப்படிதான் சொன்னாங்க, போனாங்க… ? இப்ப என்னாச்சி யாராலயும் ஒன்னும் பண்ண முடியலன்னு எகத்தாளமா பேசி சவால் விட, அந்த சமூக ஆர்வலர் கையில் செல்போன் காமிராவை எடுத்து படம் பிடிக்க தொடங்கியதும் இந்த இளம் வியாபாரியோ சத்தமில்லாமல் எத்திலீன் ரசாயன கலவையை தெளித்து வாழைத்தார்களை விற்பனைக்கு அனுப்பி வைத்தான்.
அந்த சமூக ஆர்வலரோ இந்த அநியாயத்தை வீடியோ ஆதாரத்துடன் கலெக்டரிடம் புகார் அளிப்பேன் என்று கூறிய போதும் அந்த வியாபாரி எந்த கூச்சமும் இன்றி வாழைத்தாரில் ரசாயன கலவையை தெளித்துக் கொண்டிருந்தார்.
இதே போன்று சென்னை கோயம்பேட்டில் இயங்கும் சில வாழைத்தார் மண்டிகளிலும் எத்திலீன் தெளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றது
வாழைப்பழங்களை முற்றிலும் மஞ்சள் வர்ணத்தில் பழுக்க வைப்பதற்கும், இனிப்பு சுவையை கூட்டுவதற்கும் எத்திலீன் ரசாயனம் தெளிக்கப்படுவதாகவும் இத்தகைய பழங்களை உண்பது உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.