மரியாதையாக அனுப்பி வைக்கிறோம்… சென்று விடுங்கள்’: ஓ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க ‘ஐ.டி விங்’ பகிரங்க எச்சரிக்கை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஒருபக்கம் சூடுபிடித்து சற்று அடங்கியுள்ள நிலையில், தற்போது ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருவது அதிமுகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு உறுதி செய்துள்ளது.

முன்னாள் ஜெயலலிதா இறப்புக்கு பின் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும். எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பளராகவும் பதவி ஏற்றனர். ஆனாலும் கட்சியில் முதல்வமைச்சர், எதிர்கட்சி தலைவர் போன்ற முக்கிய பதவிகளை தன்னிடம் வைத்து்ககொண்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தனது செல்வாக்கை அதிகப்படுத்திக்கொண்டார்.

இதனிடையே ஒ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வெளியில் ஒன்றாக இருப்பதாக இருந்தாலும் கட்சியில் உள்ளளவில் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதை இருவருமே தங்களது அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் கட்சியில் ஒபிஎஸ் அணி இபிஎஸ் அணி என தனித்தனியாக பிரிந்தே இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து கட்சியில் அதிகாரத்தை கைப்பற்றவும். பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்கும் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே வெளிப்படையான போட்டி நிலவியது. இதில் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க கட்சியின் நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், கடந்த 23ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவைாக செயல்பட்டதை தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசுவது என தொண்டர்கள் பலரும் ஒபிஎஸ்க்கு மரியாதை கொடுக்கவில்லை.

தொடர்ந்து வரும் ஜூலை 11-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்றும் அப்போது எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. இதனால் ஒ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் தங்களது கருத்துக்களை கூறி வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி.விங் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

இதில் அதிமுக சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முந்தய நாளை (ஜூன் 22)  இரவு 10 மணியளவில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஒ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுகட்டிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அதிமுகவின் மதுரை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் ராஜ் சத்யன்,தேதிகள் மாறலாம், தலைமை மாறாது. தலைமையை தேர்ந்தெடுப்பது, தொண்டர்களும்,மக்கள் மன்றமும் மட்டுமே… கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் 11ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது தற்செயலான அறிவிக்கப்பட்டது அல்ல என்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் முன்கூட்டியே எடுத்த முடிவு என்று சொல்லும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்படும் இபிஎஸ் 24*7 என்ற ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அதிமுக வரலாற்றில், பொதுக்குழு கூட்டத்தில் இப்படி அவமானப்பட்டு வெளியேறும் நபரை இது வரை யாரும் கண்டதில்லை. முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் இன்று சொந்த கட்சி பொதுக்குழு நபர்களால் துரோகி என்றும் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷம் போட்டு வெளியேற்றப்படும் அவமானம் மிகவும் கொடியது.

தன்வினை தானே தன்னை சுடும். இத்தனை எதிர்ப்புகள், அதிருப்தி, தொண்டர்களின் அவநம்பிக்கை அனைத்தையும் தாண்டி யாருக்காக எதற்காக இந்த பதவியை இருக்க கட்டி பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்? அப்படியே அந்த பதவி கிடைத்தாலும் அந்த பதவியை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும்? கட்சியின் தலைவனாக இருந்தாலும், தொண்டர்களின் தலைவனாக OPS இருக்க முடியுமா?

பன்னீர்செல்வம் இனியும் அவமானங்களையும் தொண்டர்களின் கோவத்தையும் சம்பாதிக்காமல் கட்சியில் இருந்து விலகி நிற்பது நல்லது. தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு அமைதியாக வாழ்வை நகர்த்தலாம். கட்சி விசுவாசிகளை, கட்சியை எதிர்த்து தான் பெரியவன் என்று நிரூபிக்கும் போக்கை கைவிட வேண்டும். அப்படி நிரூபிக்க முயற்சித்து தோற்றவர்கள் ஏராளம். மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம். நிம்மதியாக செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

இதன் மூலம் ஒபிஎஸ் உடனடியாக அதிமுகவில் இருந்து வெளியேற வேண்டும் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளது. தர்மயுத்தம் செய்யும்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆன ஒபிஸ் தற்போது தனது கட்சியில் ஐடி விங் அமைப்பின் மூலமே எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.