தந்தைக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டு உறவு இல்லை – பாலினம் மாறிய எலன் மஸ்க்கின் மகன் ஆவேசம்

கடந்த 2000 ஆம் ஆண்டு எலன் மஸ்க்கும் ஜெனிபர் ஜஸ்டீன் வில்சன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன. பின்னர் 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் எலன் மஸ்க்கிற்கு முதலாவதாக பிறந்த இரட்டை குழந்தைகள்  சேவியர், கிரிப்ஃபின் என பெயரிடப்பட்டனர். இதில் மூத்த மகன் தான் சேவியர் மஸ்க். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தங்களது 18வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு எலன் மஸ்கின் பிரபல நிறுவனத்தில் பணிபுரியவோ, நிறுவனத்தின் பங்குகளை பெயர் மாற்றி பெற்றுக்கொள்வோ செய்வார்கள் என்று எலன் மஸ்கின் சுற்றத்தார் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | கிண்டி கிங்ஸ் மருத்துவமனை விரைவில் கொரோனா சிகிச்சை மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆனால் அதற்கு மாறாக மூத்த மகன் சேவியர் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த வழக்கின் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

தனது பாலிணத்தை மாற்றிக்கொள்வதால் தனது பெயரை சேவியர் மஸ்க்கில் இருந்து விவியன் ஜென்னா வில்ஸன் என்ற பெயராக மாற்றிக்கொள்ள விரும்புவதாகவும், தனது தந்தையின் குடும்ப பெயரை விலக்கிக்கொண்டு தனது தாயின் குடும்ப பெயரான வில்சன் என்பதை தனது பெயரின் பின்னே சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தனது தந்தையுடன் தான் வாழ விரும்பவில்லை என்றும், அவருக்கும் தனக்கும் எந்த விதமான பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விருப்புவதாகவும் தெரிவித்தார்.  மேலும் இவ்வழக்கில் விவியன் ஜென்னா வில்சன் என்கிற சேவியர் மஸ்கிற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவரது இந்த வழக்குக்கு எதிர்த்தோ, ஆட்சோபனை தெரிவித்தோ எலன் மஸ்க் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.