சென்னை கேகே நகரில் மரம் விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கேகே நகரில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த பெரிய மரம் கீழே விழுந்திருக்கிறது. அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த கார் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் காரில் பயணம் செய்த வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் காரில் அவருடன் பயணம் செய்த அவரது தங்கை மற்றும் ஓட்டுநர் இருவரும் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM