அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட ஐடி நிறுவனமான அசென்சரின் வருவாயின், இந்திய தொழில் நுட்பத் துறையின் செயல் நுட்பத் துறையின் செயல்திறனுக்கான குறிகாட்டியாகக் பார்க்கப்படுகிறது.
கடுமையான சவால்களுக்கும் மத்தியிலும் அசென்சர் நிறுவனம் எதிர்பார்ப்பினை விட நல்ல வருவாய் வளர்ச்சியினை கண்டுள்ளது.
இது 4% ஆக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
75,000 பேருக்கு வேலை.. ஷேடோபாக்ஸ்-ன் சூப்பர் அறிவிப்பு.. !
வருவாய் வளர்ச்சி
2022 நிதியாண்டில் 3 – 4.5% வரை நாணயத்தின் தாக்கம் இருந்த போதிலும், ஐடி நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டில் வருவாய் வளர்ச்சி விகிதம் குறித்தான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. அதன் வருவாய் வளர்ச்சி விகிதம் கடந்த காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது.
நல்ல வளர்ச்சி
அசென்சரின் வலுவான செயல்திறன் மற்றும் உறுதியான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தரகு நிறுவனம் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியினை ஆதரிக்கிறது. அவற்றோடு ஐடி துறையில் அவுட்சோர்ஸிங் ஆதரவும் அதிகமாக உள்ளது. ஆர்டர்களும் அதிகமாக உள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் நல்ல விஷயமே.
தரகு நிறுவன பங்கு
இதற்கிடையில் ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்ஸ்டன்ஸி சர்வீசஸ் போன்ற லார்ஜ் கேப் நிறுவனங்களையும், கோஃபோர்ஜ், எல்டிஐ மற்றும் மைண்ட் ட்ரீ போன்ற மிட்கேப் ஐடி பங்குகளையும், ஸ்மால்கேப் நிறுவனங்களில் ஷென்சார் டெக், பிர்லா சாப், பர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூசன்ஸை தரகு நிறுவனம் கணித்துள்ளது.
ஐடி நிறுவனங்களின் தரம் குறைப்பு
தற்போதைய சந்தை விலைக்கு மத்தியில் இந்திய ஐடி பங்குகள் சமீபத்தில் அழுத்தத்தில் உள்ளன. வாடிக்கையாளர்களால் ஐடி செலவினங்களில் சாத்தியமான குறைப்புகளுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மந்த நிலை அச்சங்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் உணர்வைக் குறைக்கின்றன. உலகளாவிய தரகு நிறுவனங்களான ஜேபி மார்கன் மற்றும் நோமுரா ஆகியவை இந்திய ஐடி துறையின் தரத்தினை குறைத்துள்ளன. நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டினையும் குறைத்துள்ளன.
is all well for indian IT companies? What does the Accenture result say?
Accenture, a US-based IT company, is seen as an indicator of the performance of the Indian technology industry in terms of revenue.