குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், மாநிலங்களவைச் செயலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
முர்முவின் வேட்பு மனுவை பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் முன்மொழிந்தனர்.
இதேபோல் ஐம்பதுக்கு மேற்பட்டோர் வழிமொழிந்தனர். வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.