வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-உலகில், வாழ்வதற்குரிய அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் நகரங்களில், புதுடில்லி, 112வது இடத்தை பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘தி எக்கனாமிஸ்ட்’ இதழ், உலகில் வாழ்வதற்குரிய சிறந்த சூழல் நிலவும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அரசியல், சமூக ஸ்திரத்தன்மை, குற்றம், கல்வி, ஆரோக்கியம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில், 172 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, முதலிடத்தை பிடித்துஉள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம், 38ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில், ஐரோப்பாவின் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் மூன்றாவது இடத்தையும், ஜெனீவா ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம், 7வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், 9வது இடத்தைப் பிடித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கால்கரி, வான்கூவர், டொரன்டோ ஆகிய நகரங்கள் முறையே, 3, 5 மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளன. 10வது இடத்தை தெற்காசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரமும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்தப் பட்டியலில், கடைசி இடத்தை மேற்காசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி, வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய நகரங்களும், இறுதி வரிசையில் இடம் பெற்றுள்ளன.
Advertisement