மோடி அரசை விளாசும் ப.சிதம்பரம்.. நிதி பற்றாக்குறை இலக்கில் மாற்றம்..!

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து உள்ள வேளையில், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பைக் குறைத்த காரணத்தால் மோடி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மோடி அரசு தனது நிதி பற்றாக்குறை இலக்கை சில மாதங்களில் அதிகரித்துள்ளது.

இதைக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

மோடி அரசுக்கு அடுக்கடுக்கான சவால்.. நவம்பர் மாதம் முக்கிய முடிவு..!

நரேந்திர மோடி அரசு

நரேந்திர மோடி அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் ஏப்ரல் 1 முதல் துவங்க உள்ள புதிய நிதியாண்டில் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு 6.4 சதவீதமாக இருக்கும் கணித்து அறிவித்து இருந்தது, இதைத் தற்போது 6.7 சதவீதம் வரையில் உயர்த்துள்ளது என அறிவித்துள்ளது.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

இதுக்குறித்துப் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் அரசு சில மாதத்தில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான தனது 6.4 சதவீத நிதிபற்றாக்குறை இலக்கை மாற்றியுள்ளது, தற்போது அரசு 2021-22 நிதியாண்டின் 6.7 சதவீதத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வதாக அறிவித்துள்ளது என டிவீட் செய்துள்ளார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் கேள்வி
 

ப.சிதம்பரம் கேள்வி

அதிகப்படியான நிதி பற்றாக்குறை அளவீடு, அதிகப்படியான பணவீக்கம், அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அன்னிய செலாவணி இருப்பில் சரிவு ஆகியவை இந்தியாவில் இருப்பதால் அரசு எதைக் கைகாட்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்

பொருளாதாரத்தின் ஆரோக்கியம்

பொருளாதாரத்தின் ஆரோக்கியம்

இதேபோல் இந்திய பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மோசமாக உள்ளதா என்ற தொனியில், இந்தியப் பொருளாதாரம் pink of health நிலையில் உள்ளதா எனப் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். ப.சிதம்பரம் டிவிட்க்கு பலர் பதில் அளித்துள்ளனர், இதில் பலர் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளனர்.

வலிமையற்ற நிர்வாகம்

வலிமையற்ற நிர்வாகம்

வலிமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்குவதில் குறைவான அதிகாரம் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரம் என்னும் சக்கரம் சிறப்பாக இயங்காது எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

இதேபோல் மற்றொருவர் ப.சிதம்பரம்-திடம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போது 100 ரூபாயை தொடும் எனக் கேட்டுள்ளார்.

ஆனால் இதேவேளையில் ரூபாய் மதிப்பு 78.32 என்ற வரலாற்று உச்ச விலையை எட்டியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is the Indian economy in the pink of health? P. Chidambaram question on fiscal deficit slide

Is the Indian economy in the pink of health? P. Chidambaram question on fiscal deficit slide மோடி அரசை விளாசும் ப.சிதம்பரம்.. நிதி பற்றாக்குறை இலக்கில் மாற்றம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.