வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை

வயநாடு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தை  கேரளா ஆளும் கட்சியினர் அடித்து நொறுக்கி சூறையாடினர். அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டரில் ஆட்கள் வசிப்பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் மலை மாவட்டமாக உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி எம்பியாக இருந்தாலும் இதுபற்றி அவர் எதுவும் பேசவில்லை என கூறி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. கண்டன  ஊர்வலம் நடத்தினர்.அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி அடித்து நொறுக்கினர். இந்த விவகாரத்தில் 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.