சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தமிழக பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவாக நிலவியது. அதன் காரணமாக பரவலாக மழை கிடைத்தது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுகுறைந்துள்ளது. அதனால் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளது.
மேற்கு திசைக் காற்று, வெப்பச் சலனம் காரணமாக வரும் 25, 26,27, 28-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.