தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது .
அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என்றும் வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கிருமிநாசினி வைக்காமல் உத்தரவை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.