அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான் நிக்கோலஸ் நகரைச் சுற்றிய நெடுஞ்சாலையில் திரண்ட லாரி ஒட்டுநர்கள் டயர்களுக்கு தீ வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால், அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.