உடல் எடையை சரியான அளவில் பராமரித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு இந்த பயத்த மாவு தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்தொகுப்பில் பயத்த ,மாவு தோசை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
பயத்தம் மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 2 ஸ்பூன்
ரவை – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 1,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி- சிறிய துண்டு
கறிவேப்பிலை – 1 கொத்து,
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
எண்ணெய் – 3 ஸ்பூன்.
முதலில் 100 கிராம் பயத்தம் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அதனுடன் அரிசி மாவு மற்றும் ரவை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் இஞ்சியைத் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இவற்றையும் கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடி செய்த காய்ந்த மிளகாயை இத்துடன் சேர்த்துகொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டு வர இத்துடன் தண்ணீர் சேர்க்க வேண்டும். 10 நிமிடத்திற்கு நன்றாக ஊறவைத்து, அதன் பின்னர் தோசைக்கல்லை வைத்து, தோசை ஊற்ற வேண்டும்.