உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் உக்ரேனிய ஆயுதப் படைகள் தங்கிருப்பதாகக் கருதி ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யப் படைகள், பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய தாக்குதலில் கட்டிடம் இடிந்து நொறுங்கி சேதமடைந்தது.