லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்… புகைப்படங்களுடன் புதிய தகவல்


லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண்ணான 89 வயது மூதாட்டியை பேரன் கொலை செய்த வழக்கில் புதிய தகவல்கள் வந்துள்ளதோடு கொல்லப்பட்ட பெண்ணின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Croydon-ல் வசித்து வந்த சகுந்தலா பிரான்ஸிஸ் (89) என்ற பெண் கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொலிசாருக்கு போன் வந்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் குழு மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் அதே இடத்தில் சகுந்தலா உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
சகுந்தலாவை கொலை செய்ததாக அவரின் பேரன் வெருஷன் மனோகரன் (31) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொலிசார் சம்பவம் தொடர்பில் தற்போது சில விடயங்களை கூறியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், முழு சூழ்நிலை பற்றி அறிய விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல்

Met Police

இந்த மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை.
சகுந்தலாவின் குடும்பத்தினருக்கு அவர் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது, சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளனர். 

சகுந்தலாவின் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கூறுகையில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், அவரது கணவர் 2018 இல் இறந்துவிட்டார்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல்

UkNewsinPictures

எனக்கு அவரை தெரியாது, ஆனால் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

19 வயது இளைஞரான ஆடம் ஜோன்ஸ் என்பவர் கூறுகையில், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது தெருவில் ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸ் வாகனம் நின்றிருந்தது.

இந்த சம்பவம் ஒரு கனவு போல உள்ளது, ஏனெனில் என் வீட்டுக்கு அருகிலேயே இந்த கொலை நடந்துள்ளது. இந்த சாலையில் ஒரு ஆரம்பப் பள்ளி இருக்கிறது என கூறியுள்ளார்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல்

UkNewsinPictures



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.