பலத்த மழைவீழ்ச்சி, காற்றுடனான காலநிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2022 ஜூன் 25ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலிய, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி ,கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவுக்கு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு பகுதியிலும் ,வடக்கு ,வட மத்தி மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருக்கோணமலை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மணித்தியாளத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் ஓரளவுக்கு பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.