மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும் ஆயுத கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் 12 பேர் பலியாயினர்.
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படும். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டு தாக்குதல் நடத்தி கொள்வார்கள்.இந்நிலையில், அந்நாட்டின் மேற்கே ஜாலிஸ்கோ மாகாணத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் நடந்த நிலையில், அதனை கண்காணிப்பதற்காக மெக்சிகோ நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ வீரர்கள் கொண்ட குழுவை கடந்த மார்ச்சில் அமைத்தது.
மெக்சிகோவின் கூட்டு அதிரடி படை திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் குற்ற செயல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.ஜாலிஸ்கோவில் உள்ள எல் சால்டோ நகரில் ஒருவீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எல் சால்டோ நகர போலீசார், மாகாண போலீசார் இணைந்து அதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில், 8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை உறுதி செய்துள்ள கவர்னர் என்ரிக் ஆல்பேரோ, இந்த மோதலில், எல் சால்டோ நகர போலீஸ் அதிகாரிகள் 4 பேர் பணியின்போது உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார். 2010ல் சினாலோவா என்ற போதை பொருள் கடத்தல் கும்பலில் இருந்து ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற புதிய போதை பொருள் கடத்தல் கும்பல் உருவானது. இது மெக்சிகோ சிட்டி உள்பட, 7 மாகாணங்களில் கிளை பரப்பி செயல்படுகிறது.
Advertisement