England vs New Zealand, 3rd Test Tamil News: இங்கிலாந்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு ஆட்டங்களை வென்றுள்ள இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய ஆட்ட நேரத்தின் போது நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஜாக் லீச் வீசிய பந்தை எதிர்கொண்ட ஹென்ரி நிக்கோல்ஸ் ஸ்ட்ரைட் திசையில் ஒரு ட்ரைவ் ஷாட்டை அடித்தார். அவர் சற்று வேகமாக அடித்த அந்த பந்து எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல்லை நோக்கி சீறியது.
அப்போது பந்தை பார்த்த மிட்செல் தனது பேட்டில் படும் என்பதை உணர்ந்து பேட்டை தனது பக்கம் இழுத்தார். ஆனால், பந்து கன நொடியில் அவரது பேட்டில் பட்டு, நேராக அங்கு மிட் -ஆஃபில் இருந்த பில்டர் அலெக்ஸ் லீஸ் வசம் கேட்ச் ஆகியது. பந்து ஏற்கனவே தடுக்கப்பட்டு ஓரளவுக்கு மேலே பறந்து வந்த நிலையில், அதை லீஸ் லாவகமாக பிடித்தார். இதனால் ஹென்ரி நிக்கோலஸ் 19ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹென்ரி நிகோல்ஸ் தான் இப்படி சொந்த அணி வீரரால் எதிர்பாராத மற்றும் வித்தியாசமான முறையில் ஆட்டமிழப்போம் என்று எதிர்பார்க்காதவராய் பெவிலியன் நோக்கி நடந்தார்.
ஹென்ரி நிகோல்ஸ் இப்படி வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டபட்ட நிலையில், கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
What on earth!? 😅🙈
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/yb41LrnDr9
— England Cricket (@englandcricket) June 23, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil