பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் சூரிய குடும்பத்தின் முக்கிய கோள்களின் அணிவகுப்பு வானில் நிகழ்ந்து வருவதாக கொடைக்கானல் வான் இயற்பியல்ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது.
நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் உள்ள ஒன்பது கோள்களில், சனி, வியாழன், செவ்வாய், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்கள், வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து காட்சி தருவதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறும் என்றும், நேற்று துவங்கிய இந்த நிகழ்வு இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானி எபினேசர் தெரிவித்துள்ளார். இந்த அறிய நிகழ்வை அதிகாலை வேளையில், கிழக்கு திசை அடிவானத்தில் காணலாம்.
அந்த காட்சியை சூரிய உதயம் வரை வெறும் கண்களால் தெளிவாக காணமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகத்தில் வானியற்பியலில் ஆர்வமுள்ளவர்கள் அதை நிகழ்வை கண்டுகளித்து வருவதாகவும், இன்னும் நான்கு நாட்கள் இதனை காண ஆய்வகத்திற்கு சுற்றுலா பயணிகள் வரலாம் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM