Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்!
அரசு பள்ளிகளில் படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், 25ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம். மேலும், https://penkalvi.tn.gov.in என்ற என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம்.
பதிவு செய்வதற்கு, மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவை என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டது!
அதிமுகவில் அனைத்து பதவிகளும் ஐந்து ஆண்டு காலம் தான். அதன்படி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. பன்னீர்செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டதால் தற்போது அவைத்தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் என சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி!
மகாராஷ்டிர அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கிளம்பியுள்ள நிலையில், மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளும் எம்.வி.ஏ.வை காப்பாற்றவும், சிவசேனாவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் போராடி வருகிறார்.
தற்போது அக்கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தலைவர் ஏக்நாத் ஷிண்டே, விதான் பவனில் உள்ள மாநிலங்களவைச் செயலகம் மற்றும் ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை போராட்டத்தை முன்னெடுத்தார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. தூங்குபவரை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. ஓபிஎஸ் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவி வருகிறது என பேசினார்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி இணையத்தை பார்த்து அறியும் சூழல் தற்போது உள்ளது.
குழந்தை நடிகர்களுக்கான வரைவு வழிகாட்டுதலை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் படத் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும், வழிகாட்டுதல்களை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என எச்சரித்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான 444 சப்இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (25) நடக்கிகிறது. தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களுக்குட்பட்ட 197 இடங்களில் தேர்வு நடக்கிறது. 2.21 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 15,940 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 12, 425 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
அமெரிக்காவில், 50 ஆண்டு கால கருக்கலைப்பு உரிமை சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதன்மூலம் கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என 1973ம் ஆண்டு அளித்த தீர்ப்பை ரத்தானது.
டிஎன்பிஎல் இன்றைய போட்டியில், பிற்பகல் 3.15 மணிக்கு மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் இரவு 7.15 மணிக்கு சேலம் ஸ்பார்டன்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகின்றன.
நாமக்கலில் வரலாறு காணாத வகையில், முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 5.35-ஆக உள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.