தொடர்ந்து இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகரிக்கத்து வரும் நிலையில், பொருளாதார மந்த நிலையை உருவாக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எந்த மாதிரியான முதலீடுகளை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து பிரபல நிதி நிறுவனமான ஜெஃப்ரீஸ் மதிப்பிட்டுள்ளது.
சில முதலீட்டாளர்கள் வங்கி வைப்பு நிதி மற்றும் டெபாசிட் போன்ற முதலீடுகளை விரும்புகின்றனர். சிலர் தங்கத்தினை பெரிதும் நம்புகின்றனர்.
ரூ.2000 நோட்டுக்களை இனி கேஷ் டெபாசிட் மிஷின் ஏற்று கொள்ளாதா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!
விருப்பமான முதலீடு எது?
மார்ச் 2022ல் இந்திய குடும்ப சேமிப்பில் பாதி ரியல் எஸ்டேட் முதலீடுகளாக செய்யப்படுகின்றன. அதேசமயம் வங்கி வைப்பு மற்றும் தங்கம் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக உள்ளன. ஜெஃப்ரீஸ் அறிக்கையின் படி, மார்ச் 2022ல் 10.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய குடும்ப சொத்துகளில், 49.4% ரியல் எஸ்டேட் சொத்துகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கத்தில் எவ்வளவு?
அதே 15.10% இந்திய குடும்பங்களில் வங்கி டெபாசிட்டும், 15% இந்திய குடும்பத்தில் தங்கத்திலும் முதலீடு செய்துள்ளனர். இந்திய குடும்பத்தில் 6.20% இன்சூரன்ஸ் திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளனர். இது கொரோனாவின் வருகைக்கு பிறகு கணிசமாக அதிகரித்துள்ளதாக ஜெஃப்ரீஸ்அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பென்சனுக்கு முக்கியத்துவம்?
இது தவிர வருங்கால வைப்பு பென்சனுக்காக 5.7%மும், பங்குகளில் 4.8%மும், கேஸ் ஆக 3.5%மும் வைத்துள்ளனர்.
சமீபத்திய காலமாக இந்திய பங்கு சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்தாலும், உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.
பணவீக்கத்திற்கு எதிரான முதலீடு
பரவலாக மற்ற முதலீடுகளில் ஆர்வம் என்பது இருந்தாலும், ரியல் எஸ்டேட் முதலீடே மிகப்பெரிய முதலீடாக உள்ளது. அதிலும் தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் மற்ற முதலீடுகளில் நம்பிக்கை என்பது குறைந்துள்ளது. ஆக ரியல் எஸ்டேட் முதலீடே சிறந்ததாகவும் பார்க்கப்படுகின்றது. இதே பணவீக்கத்தில் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், பணவீக்கத்திற்கு மேலாக லாபம் ஈட்டும் ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
Gold or bank FD: jefferies finds his asset as top investment by Indians
What kind of investment do Indian investors want in the midst of many challenging conditions including inflation?