நீண்ட தூரத்திற்கு செல்லும் வகையில் எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு தேவை| Dinamalar

சென்னை: ”நீண்ட துாரம் செல்லும் வகையில் எலக்ட்ரிக் கார்களை வடிவமைக்க வேண்டும்” என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய செயலர் ராஜேஷ் குமார் பதக் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.இந்த கருத்தரங்கில் வாரிய செயலர் ராஜேஷ் குமார் பதக் பேசியதாவது:கார்பன் டை ஆக்ஸ்டு அளவை குறைப்பது உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் கட்டாயத்தின் பேரில் தற்போது எலக்ட்ரிக் தொழில்நுட்பத்திற்கு அதிகம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

latest tamil news

எலக்ட்ரிக் வாகனத் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் புத்தாக்க நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் எப்போதும் ஆதரவு அளிக்கும்.

இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் 1000 கோடி ரூபாய் நிதியை உருவாக்கி உள்ளது, என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.