அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர் என தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுகவை பலப்படுத்த ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அதிமுகவை பலப்படுத்த தமிழகத்தில் ஓ பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். ஓ பன்னீர்செல்வம் இனிமேல் துணிந்து செயல்பட உள்ளார் என தெரிவித்துள்ளார்.