இந்தியாவில் அனைத்து முன்னணி வர்த்தகச் சேவை நிறுவனங்களுக்கும் கடந்த 3 வருடத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்தது, ஆனால் இந்தியச் சந்தையில் வெற்றி என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்கும் ஒன்று அல்ல.
இதே நிலையில் தான் தற்போது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஓலா நிறுவனம் உள்ளது.
இந்தியர்களின் விருப்பமான முதலீடு எது.. ஜெஃப்ரிஸ் சொல்லும் விஷயத்தை பாருங்க!
பாவிஷ் அகர்வால்
பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா நிறுவனம் டாக்சி சேவையை மட்டும் வைத்துக்கொண்டு நீண்ட காலம் வண்டியை ஓட்ட முடியாது என முடிவு செய்து பழைய கார்களை விற்பனை செய்யும் ஓலா கார்ஸ் என்னும் சேவை பிரிவையும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் டெலிவரி சேவை பிரிவில் ஓலா டேஷ் என்னும் புதிய சேவையைத் துவங்கியது.
முக்கிய முடிவு
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் மோசமான வர்த்தக நிலையை எதிர்கொண்டு இருக்கும் ஓலா நிர்வாகம் வருமானம் மற்றும் வர்த்தகம் இல்லாத பிரிவுகளை மூடி பெரிய செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொள்ளும் சேவைகளை மொத்தமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
8 மாதம் – ஓலா கார்ஸ்
இதன் அடிப்படையில் ஓலா குழுமத்தின் பழைய கார்களை விற்பனை செய்யும் ஓலா கார்ஸ் சேவை பிரிவை துவங்கி வெறும் 8 மாதத்தில் மூட வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
குவிக் டெலிவரி – ஓலா டேஷ்
இதேபோல் சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்குப் போட்டியாகச் சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய குவிக் டெலிவரி சேவை பிரிவான ஓலா டேஷ் சேவை பிரிவையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
வர்த்தக மறுசீரமைப்பு
இதுகுறித்து ஓலா நிர்வாகம் கூறுகையில் ஓலா தனது வர்த்தகத்தில் முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. இதன் வாயிலாக ஓலா டேஷ் சேவையை மூடவும், ஓலா கார்ஸ் சேவை பிரிவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கான சேல்ஸ் அண்ட் சர்வீஸ் நெட்வொர்க் ஆக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
டாக்சி சேவை
ஓலா குழுமம் பல பிரிவுகளில் இயங்கினாலும் அதிகம் வருவாய் அளிப்பது என்னவோ இன்னும் டாக்சி சேவை தான், இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவை பிரிவில் உபர் மிகவும் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே கொண்டு இருக்கும் நிலையில் ஓலா மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஓலா எலக்ட்ரிக்
இதேவேளையில் ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்து சில மாதங்களுக்குள் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஓலா எலக்ட்ரிக். ஆனால் அந்த ஒரு சம்பவத்திற்குப் பின்பு ஓலா எலக்ட்ரிக் மோசமான வர்த்தகத்தைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.
3வது முயற்சியும் தோல்வி
2015 ஆம் ஆண்டில், ஓலா உணவு டெலிவரி சேவை பிரிவில் இறங்க வேண்டும் என்பதற்காக ஓலா cafes தொடங்கியது, ஆனால் ஒரு வருடம் கழித்து அதை மூடியது. 2017 இல், ஓலா நிறுவனம் Foodpanda நிறுவனத்தை வாங்கி முயற்சி செய்து மீண்டும் தோல்வி அடைந்து 2019 இல் புட்பாண்டா இந்திய வணிகத்தை மூடியது.
ஓலா ஃபுட்ஸ்
இது பின்னர் ஓலா ஃபுட்ஸ் என்ற பெயரில் கிளவுட் கிச்சன் வணிகத்தில் கவனம் செலுத்தியது, ஆனால் வர்த்தகத்தை ஈர்க்க முடியாமல் வர்த்தகத்தை மூடிவிட்டுச் சமையலறை உபகரணங்களை விற்பனை செய்தது.
இப்போது ஓலா டேஷ் பிரிவு வர்த்தகத்தையும் மூடியுள்ளது.
Ola shuts down used cars network Ola Cars and quick commerce businesses Ola Dash
Ola shuts down used cars network Ola Cars and quick commerce businesses Ola Dash கலையலங்காரா.. எல்லாத்தையும் மாத்துங்கடா.. வர்த்தகத்தை மூடிய ஓலா..!