மங்களூரு : உல்லாளில் மூழ்கிய கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை, கடலோர காவல் படையினர் ஆறு படகிலும், இரண்டு ஹெலிகாப்டரிலும் கண்காணித்து வருகின்றனர்.ஓமனிலிருந்து எகிப்துக்கு 80 ஆயிரம் கிலோ இரும்பு கம்பிகளை சுமந்த கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், 15 பேர் இருந்தனர்.
இக்கப்பல், ஜூன் 21ல் தட்சிண கன்னடா உல்லாளின் உச்சில சோமேஸ்வரா அருகில் செல்லும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நின்றது. நடுக்கலில் சிக்கியவர்களை, கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர்.இந்நிலையில், நேற்று இக்கப்பல் மூழ்கியது. இதையடுத்து, கடலோர காவல் படையினர், ஆறு ரோந்து படகிலும், இரண்டு ஹெலிகாப்டரிலும், கடலில் மாசு ஏற்பட்டுள்ளதா என கண்காணித்து வருகின்றனர்.இது தொடர்பாக, மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாடு ஆணையம், நியூ மங்களூரு துறைமுகம், மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ ரசாயன நிறுவனத்தினரும் கண்காணிக்கின்றனர்.
மங்களூரு : உல்லாளில் மூழ்கிய கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை, கடலோர காவல் படையினர் ஆறு படகிலும், இரண்டு ஹெலிகாப்டரிலும் கண்காணித்து வருகின்றனர்.ஓமனிலிருந்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.