ஆர்.டி.நகர், : பெங்களூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஒயர்களை அபார்ட்மென்டிலிருந்து வந்த எலிகள் கடித்து குதறியதால், தனக்கு ௧ லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க கோரி மிரட்டியவர் மீது, அபார்ட்மென்டில் வசிப்பவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.பெங்களூரு ஆர்.டி.நகரில், ‘கம்போர்ட் என்கிளேவ்’ அபார்ட்மென்ட் உள்ளது.
இதன் எதிரில், அதே பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணா, 40, என்பவர், தன் காரை நிறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் காரை எடுக்க முயற்சித்தபோது, ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை. பின் ஆராய்ந்தபோது, காரில் இருந்த ஒயர்களை, எலி கடித்திருந்தது தெரியவந்தது. அபார்ட்மென்டிலிருந்து வந்த எலி தான் காரணம் என கூறி, அங்கிருந்த குப்பை தொட்டியை, அபார்ட்மென்ட் வளாகத்தில் கவிழ்த்து, குப்பையாக்கினார்.
தனக்கு ௧ லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்; இல்லையெனில், கொலை செய்து விடுவதாக, அபார்ட்மென்ட் சங்க தலைவர் மற்றும் குடியிருப்புவாசிகளை மிரட்டியுள்ளார்.இதனால், அபார்ட்மென்ட்வாசிகள் ஆர்.டி.நகர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு, லட்சுமி நாராயணாவுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement