சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ கஞ்சாவை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தன் கையால் தீயிட்டு அழித்தார்.
2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் ஆலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.