திருவள்ளூர் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் பதினோராம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே கோட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். இவருடைய மகன் ஜானகிராமன்.
இவர் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள நிலையில் வருகின்ற 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் ஜானகிராமன் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள குளக்கரை பகுதியில் இருந்த புளியமரத்தில் ஜானகிராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.