மதுரையில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த பிரபல பன் பரோட்டா உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சாத்தமங்கலத்தில் பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்று, சாலையை ஆக்கிரமித்து பன் பரோட்டா கடை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
புகாரின்பேரில் அந்த கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், தடையை மீறி உணவகத்தில் விற்பனை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்தனர்.