Tamilnadu Govt plans to redesign Engineering and Polytechnic syllabus for EV: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பாடங்களை அதற்கேற்றாற்போல் வடிவமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனை உதவும் என்பதால், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும் விற்பனை நிலையங்களை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உதவவுள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு மையம் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த எலக்ட்ரிக் வாகன உச்சி மாநாடு 2022 இல் பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சென்னை, ஏற்கனவே இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியின் தலைநகராக உள்ளது, மேலும் மின்சார வாகன நிறுவனங்களை விற்பனை நிலையங்கள் அமைக்க தமிழக வரவேற்கிறது, அவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் ஆகிய இரண்டு தொழில்துறை கிளஸ்டர்களையும் தமிழ்நாடு ஆதரிக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் கிளஸ்டரில் ஹூண்டாய் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற பெரு நிறுவனங்கள் உள்ளன, அதே நேரத்தில் வளர்ந்து வரும் ஓசூர்-கிருஷ்ணகிரி-தர்மபுரி கிளஸ்டரில் ஓலா, ஏதர் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: 10, 12-ம் வகுப்பு தற்காலிக சான்றிதழ்: டவுன்லோட் செய்வது எப்படி?
2019 ஆம் ஆண்டில் மின்சார வாகன பாலிசி தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு மின்சார வாகனத் துறையில் 20,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 50,000 வேலைகளை உருவாக்கியுள்ளது. மாநில அரசு, முதலீட்டாளர்களை ஈர்த்து, மின்சார வாகன உற்பத்தி மதிப்புச் சங்கிலி முழுவதும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, குறிப்பாக பேட்டரி உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக, முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் எளிதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஏற்றவாறு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்வதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் தொடங்கியுள்ளது, என பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை, தமிழ்நாடு வழிகாட்டுதலின் துணைத் தலைவர், ஆம்ப்ரின் மொய்னுதீன் கூறினார்.
இந்திய ஆட்டோமொபைல் தொழில் உலகில் ஐந்தாவது பெரியது. இது 2030 ஆம் ஆண்டில் மூன்றாவது பெரியதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய எரிசக்தி சேமிப்புக் கூட்டணியின் (IESA) படி, இந்திய மின்சார வாகன தொழில்துறையானது 36% CAGR இல் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வணிக கார்களில் 70%, தனியார் கார்களில் 30%, பேருந்துகளில் 40% மற்றும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் 80% என்ற அளவில் மின்சார வாகனமாக மாறுவதை நிதி ஆயோக் நோக்கமாக கொண்டுள்ளது.