சென்னை: நில அபகரிப்புக்கு அதிகாரிகள் துணை போன புகாரில் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்ட பதிவாளர், சார் பதிவாளருக்கு எதிரான புகார் மீது ஓராண்டாக நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு அதிகாரிகள் துணை போனதாக கோவையை சேர்ந்த நாராயணசாமி என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.