அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தெரிவித்து திருநங்கை சமூகத்தினரால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக கொழும்பு காலி முகத்திடலில் அமைந்திருக்கும் கோட்டா கோ கம போராட்டக் களத்தை நோக்கிச் செல்கின்து.
எங்களுக்கான மரியாதையை தாருங்கள்..
இதன்போது, இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் தமது சமூகத்தினருக்கான மரியாதையை வழங்குமாறும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.