ஆந்திரா மாநிலத்தில் 13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக அம்மாநில அரசு பிரித்து செயல்படுத்தி வருகிறது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரை மையமாகக் கொண்டு கோணசீமா என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது அதற்கு டாக்டர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக சென்ற போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.
இந்நிலையில், ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கோணசீமா என பெயர் வைப்பதற்கான தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி அரசு வெற்றிகரமாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
சாதியவாத சனாதனிகளின் வன்முறைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள அம்மாநில முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மனமார்ந்த நன்றி!வாழ்த்துகள். pic.twitter.com/F3RFZbZuez
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 25, 2022
இந்த நிலையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “சாதியவாத சனாதனிகளின் வன்முறைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள அம்மாநில முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மனமார்ந்த நன்றி!வாழ்த்துகள்.” என் தெரிவித்துள்ளார்.