மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீதா ராமம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனிக் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹே சினாமிகா’ மற்றும் ‘சல்யூட்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தை தொடர்ந்து, ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘சீதா ராமம்’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான லெப்டினனென்டாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, காஷ்மீரைச் சேர்ந்த ஆஃப்ரீன் என்ற இஸ்லாமியப் பெண்ணாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி வரவவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டீசரில் ராஷ்மிகா மந்தனா காட்டப்படாதது சிறிது ஏமாற்றம் அளித்ததாலும், படக்குழு அவரது கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.