காசி, காயாவுக்கு விமான சுற்றுலா அறிவித்தது IRCTC.. பேக்கேஜ் விவரம் என்னென்ன தெரியுமா?

IRCTC சார்பில் காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இதுவரை மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது.
அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது.
அதற்கான 7 நாள் சுற்றுலா ஜூலை 27ம் தேதி அன்று திருச்சியில் இருந்து தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயணக் காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 37,900 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: 
ரயில் பயணிகள் கவனத்திற்கு: wake up call அம்சத்தை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
அரசு ஊழியர்கள் LTC (Leave Travel Concession) வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
IRCTC சார்பில் காசிக்கு முதல்முறையாக விமான சுற்றுலா இயக்கப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ALSO READ: 
FACT CHECK : ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் பெற மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகையா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.