திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இலவச தரிசன வரிசையில் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று 71,589 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.30 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சனிக்கிழமையான இன்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பி ஆஸ்தான மண்டபம் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் நிற்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.