ஓரேயொரு அறிவிப்பு.. 2000 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்..!

உலகம் முழுவதும் அதிகரித்து இருக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் பொருளாதார சரிவில் சக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே திவாலானதாக அறிவிக்கப்பட்ட இலங்கை மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் நிலவரத்தை இந்திய பொருளாதார வல்லுனர்களும், பங்குசந்தை முதலீட்டாளர்களும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்நாட்டு பங்குச்சந்தையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திடீர் எச்சரிக்கை.. பாகிஸ்தான், இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலி..!

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், அரசுக்கு கூடுதலான வருவாயை திரட்டும் நோக்கிலும், அந்நாட்டின் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மீது 10 சதவீதம் சூப்பர் டாக்ஸ் விதிக்கப்பட்ட உள்ளதாக ஜூன் 24ஆம் தேதி அறிவித்தார்.

ஷெபாஸ் ஷெரீப்

ஷெபாஸ் ஷெரீப்

ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ள 10 சதவீத சூப்பர் டாக்ஸ் என்பது சிமெண்ட், ஸ்டீல், சர்க்கரை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உரங்கள், LNG டெர்மினல்கள், டெக்ஸ்டைல், வங்கி, ஆட்டோமொபைல் மற்றும் சிகரெட்டுகள் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்பட உள்ளது.

 பொருளாதாரம்
 

பொருளாதாரம்

இந்த அறிவிப்புக்கு பின்பு அந்நாட்டு மக்களிடம் பேசிய ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லும் முன்பு இந்த முக்கியமான எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் பங்குச்சந்தை

பாகிஸ்தான் பங்குச்சந்தை

ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பின்பு பாகிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சுமார் 2000 புள்ளிகள் வெறும் 22 நிமிடத்தில் சரிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் முக்கிய வர்த்தக வர்த்தக குறியீடான KSE-100 2053 புள்ளிகள் சரிந்து 4.8 சதவீத சரிவை பதிவு செய்தது.

வரி உயர்வு

வரி உயர்வு

இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டில் தற்போது கார்பரேட் இன்கம் டாக்ஸ் 50 சதவீதமாகவும், முதலீட்டாளர்கள் வரி 55 சதவீதமாக உயர்ந்துள்ளது என பாகிஸ்தான் நாட்டின் Alpha Beta Core நிறுவனத்தின் சிஇஓ குர்ரம் ஷெஹ்சாத் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே அதிகமான வரி விதிப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

பாகிஸ்தான் அரசு அந்நாட்டு நிதி நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, வரி உயர்வு என பலவற்றை அதிகரித்துள்ளது.

41 பில்லியன் டாலர்

41 பில்லியன் டாலர்

அடுத்த 12 மாதத்தில் பாகிஸ்தான் தனது கடன்களை அடைக்கவும், இறக்குமதிக்காகவும் சுமார் 41 பில்லியன் டாலர் வேண்டும். இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி 10 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்துள்ளது.

நம்ம ரேஞ்சே வேற: ஐபிஎல் போட்டிக்கும் பாகிஸ்தான் பிரிமியர் போட்டிக்கும் உள்ள வித்தியாசம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan slaps 10% super tax on large scale industries; Pakistan Stock Exchange loses 2000 points

Pakistan slaps 10% super tax on large scale industries; Pakistan Stock Exchange loses 2000 points ஓரேயொரு அறிவிப்பு.. 2000 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்..!

Story first published: Saturday, June 25, 2022, 19:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.