பஞ்சாப்பில் லஞ்ச வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மர்ம மரணம்: துப்பாக்கி குண்டு பாய்ந்தது

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் மான், லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். டெண்டர் ஒதுக்கீடுக்கு ஒரு சதவீதம் லஞ்சம் கேட்ட சுகாதார அமைச்சரை கைது செய்து சிறையில் அடைந்தார். இதைத் தொடர்ந்து, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் டெண்டரை வழங்க லஞ்சம் கேட்ட ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி, கடந்த வாரம் கைது அதிரடியாக செய்யப்பட்டார். இந்நிலையில், பாப்லியின் மகனும் வழக்கறிஞருமான கார்த்திக் (27) நேற்று தனது வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரை போலீசார் கொன்று விட்டதாக பாப்லியின் மனைவி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தனர். அவர்கள் எனது மகனை மாடிக்கு அழைத்து சென்று மனரீதியாக சித்ரவதை செய்தனர்.  பொய் வழக்கு போட வேண்டும் என்பதற்காக எனது மகனை பறித்து விட்டனர்,’ என்று குற்றம்சாட்டினார். அதே நேரம், ‘‘கார்த்திக் தற்ெகாலை செய்துள்ளார். உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொண்டுள்ளார்,’ என்று போலீசார் கூறினர். இச்சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.