நட்பு நாடான பெலாரஸுக்கு விளாடிமிர் புடின் அளித்த வாக்குறுதி


ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை வரும் மாதங்களில் அனுப்பும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புடின் வாக்குறுதி அளித்துள்ள ஏவுகணை அமைப்பானது 500கிமீ (310 மைல்கள்) வரை செல்லக்கூடியது என கூறப்படுகிறது.
பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது படையெடுப்பதற்கான ஜனாதிபதி புட்டின் முடிவைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

அப்போதிருந்து, புடின் அணு ஆயுதங்கள் குறித்து பல குறிப்புகளை அளித்துள்ளார், சிலர் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பதாக விளக்கினர்.

நட்பு நாடான பெலாரஸுக்கு விளாடிமிர் புடின் அளித்த வாக்குறுதி

இந்த நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேசிய புடின், பெலாரஷ்யன் SU-25 போர் விமானங்களை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்க ரஷ்யா உதவும் என்றும் லுகாஷென்கோவின் கேள்விக்கு பதிலளித்தார்.

இதனிடையே, உக்ரைனின் முக்கிய கிழக்கு நகரமான செவரோடோனெட்ஸ்க் பகுதியை ரஷ்ய துருப்புகள் மொத்தமாக கைப்பற்றியதாக உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

நட்பு நாடான பெலாரஸுக்கு விளாடிமிர் புடின் அளித்த வாக்குறுதி

செவரோடோனெட்ஸ்க் பகுதியை கைப்பற்றியதை அடுத்து, ரஷ்யா இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் பகுதி மற்றும் அண்டை பிராந்தியமான டோனெட்ஸ்க் பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது என்றே கூறப்படுகிறது.

ஆனால், உக்ரைன் துருப்புகள் தொடர்ந்து போராடும் எனவும், இழந்த பகுதிகளை மீட்டெடுப்போம் எனவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.